பக்கம் எண் :

700

உண்முத் தரும்ப வுவகை தருவான்
     ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும்
     வெண்காடே.                     3
2127.







நரையார் வந்து நாளுங் குறுகி
     நணுகாமுன்
உரையால் வேறா வுள்கு வார்கள்
     உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான்மேவு
     மூர்போலும்
விரையார் கமலத் தன்ன மருவும்
     வெண்காடே.                     4


தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற
அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்.

     கு-ரை: தண் முத்து-தண்ணிதாகிய முத்துக்கள். அரும்ப-அரும்பு
போலத் தோன்ற. தடம் மூன்று-மூன்று திருக்குளங்களை; ‘முக்குளம்’.
உன்னி-தியாநம் புரிந்து கண்முத்து அரும்ப-கண்களில் ஆனந்த பாஷ்பம்
முத்துக்களைப் போலச் சொட்ட. கழல் சே அடி-கழலைப் பூண்ட செய்ய
திருவடிகளை. உள்-உள்ளத்தே. முத்து அரும்ப-முத்துப் போலும் வெளிதான
நிலை (அகளங்கம் ஆன தூய தன்மை) தோன்ற. உவகை தருவான்-இம்மை
மறுமை இன்பங்களும் பேரின்பமும் அருள்பவர். வெண்முத்து அருவி-
வெளிய முத்தினை ஒத்த அருவி. புனல்-நீர்.

     4. பொ-ரை: தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி
மூப்பு நணுகுதற்குமுன, உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து
கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும்
தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும்.

     கு-ரை: நரையார்-வெளுத்த மயிர். ‘தென்றலால் புகுந்துலவும்
திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்’ (தி.1 ப.60 பா.7)
‘கொண்டலார்’ கொணர்ந்து அங்கு உலவுந் திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாம் துதிசெய்ய’ (பதி. 188 பா.8). நரையார்-(தி.1 ப.7 பா.91)
நாளும் குறுகி-உயிர் உடம்பின் நீங்கும் நாளும் நெருங்கி,