பக்கம் எண் :

699

2125.







நாத னம்மை யாள்வா னென்று
     நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியு மடியார்
     தங்கண்மேல்
ஏதந் தீர விருந்தான் வாழு
     மூர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும்
     வெண்காடே.                  2
2126.


தண்முத் தரும்பத் தடமூன் றுடையான்
     றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை
     தொழுவார்கள்


     2. பொ-ரை: நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான்
என்று அவன் பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள்
திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள
எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்.

     கு-ரை: நம்மை நாதன் ஆள்வான் என்று நவின்று ஏத்திப் பல்
நாள் பாதம்பணியும் அடியார் தங்கள்மேல் ஏதம்தீர இருந்தான்-நம்மை
நம்பெருமான் ஆளாக்கொண்டு காப்பான் என்று கருத்திற் கொண்டு,
வாயால் பயின்று துதித்துப் பல நாளும் வணங்குகின்ற அடியவர்களிடத்தில்
(அணுகும்) துன்பங்கள் தீர்ந்தொழியும் பொருட்டு எழுந்தருளியிருக்கும்
சிவபெருமான். ‘பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும்
ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும்
மிழலை’ (தி.1 ப.132 பா.1) கிளிகள் வேதத்தின் ஒலியாற் சொற்பயிலும்.
‘பண்மொழியால் அவன் நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர்
கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே’ (பதி. 184. பா.6).

     3. பொ-ரை: குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத்
தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள்
போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக்
கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை