பதிக
வரலாறு:
பதிகம்
184 இல் பார்க்க.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 197
பதிக எண்: 61
திருச்சிற்றம்பலம்
2124.
|
உண்டாய்
நஞ்சை யுமையோர் பங்கா
வென்றுள்கித்
தொண்டாய்த் திரியு மடியார் தங்கள்
துயரங்கள்
அண்டா வண்ண மறுப்பா னெந்தை
யூர்போலும்
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய்
வெண்காடே. 1 |
1. பொ-ரை:
நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி
மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத்
துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறநத்தீர்த்தருளும் எந்தையினது
ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத்
தேனுண்ணும் திருவெண்காடாகும்.
கு-ரை:
நஞ்சை உண்டாய் உமையோர்பாங்கா என்று உள்கி-
நஞ்சினை அமுதாக உண்டு தேவர் முதலியோரைக் காத்த தலைவரே!
அம்மையப்பரே! என்று உள்ளத்தில் தியானம் புரிந்து.
தொண்டாய்த்
திரியும் அடியார் தங்கள்-தொண்டராகி உலவும்
அடியவர்களுடைய. அண்டாவண்ணம் அறுப்பான்-மீண்டும் அண்டாதவாறு
அறத் தீர்த் தருள்பவன்.
வெண்டாமரை மலர்மேல்
கருவண்டுகள் யாழ் (ஒலி யைச்) செய்யும்
வளத்தையுடைய திருவெண்காடு எந்தை ஊர் போலும். மேலும் இவ்வாறே
கொள்க. (பா-2,4,5,6,8,9 நோக்குக).
|