|
கானம்
முறைவார் கழல்சேர் பாட
லிவைவல்லார்
ஊன மிலரா யும்பர் வானத்
துறைவாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
உணர்ந்தவனாகிய காழி
ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை
பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும்
இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப்
பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.
கு-ரை:
ஞானம்-சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய
உவமையிலாக் கலை ஞானமும், பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய
ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானமும் உணர்வான்-திருவருண் ஞானம்
குழைத்து அளித்த அம்பிகையின் திருமுலைப்பால் குடித்த அந்நிலையில்
(ஓதாது) உணர்ந்தவர். தேன்-நால்வகை. வண்டுள் ஒன்று. திருப்பாசூர்க்
கானம்-என்பதை நோக்கின் பைங்கான் (பா.4) என்புழிக் காடென்னும்
பொருள் ஏற்றதாதலறிக. ஊனம்-பிறப்பிறப்பாகிய குறைகள். உம்பர் வானத்து
-வானோர்க்குயர்ந்த உலகத்தில்.
திருஞானசம்பந்தர்
புராணம்
திருப்பாசூர்
அணைந்தருளி அங்கு மற்றச்
செழும்பதியோர் எதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வேய் இடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலாம் முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
இடையார் என் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.
-சேக்கிழார்.
|
|