2122.
|
தூய
வெயினின் றுழல்வார் துவர்தோ
யாடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார்
நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தா
ரூர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப்
பாசூரே. 10 |
2123.
|
ஞான
முணர்வான் காழி ஞான
சம்பந்தன்
தேனும் வண்டு மின்னிசை பாடுந்
திருப்பாசூர்க் |
தலை-பல் சிந்திய
தலை. பல் இல் ஓடு கையேந்தி (தி.1 ப.51 பா.4)
தி,2 ப.91 பா.6) (தி.3 ப.45. பா.4) பல்லார் தலைசேர் மாலை (தி.2
ப.63
பா.3) வெண் பற்றலை கலனா (தி.7 பா.506) பல் இல்வெள்ளைத்தலையன்
(தி.7 ப.8. பா.4) நான்-பிறந்த வாயையுடைய நாரை, ஆரல் மீன்களை
வாரும் பாசூர். வாடும் -வௌவும்.
10. பொ-ரை:
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர்
தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால்
வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும்
முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர்
பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர்
ஆகும்.
கு-ரை:
தூய வெயில்-நல்லவெயில். தூய்மை-கலப்பின்மை
உணர்த்திற்று. சுத்தப்பொய் என்பதுபோல. வெய்ய-கொடிய சொற்களை,
நயம்-நீதி. காவல்-மும்மதில்: திரிபுரம் தொழிலாகுபெயர். பாவைக்குரவம்
-பாவைபோலும் பூத்தலையுடைய குரவமரம். அரவின்வாயின் முள்ளெயிறு
ஏய்ப்ப அரும்பு ஈன்று குரவம்பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
(தி.1 ப.99 பா.9).
11. பொ-ரை:
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை
|