பக்கம் எண் :

695

2121.







நகுவாய் மலர்மே லயனு நாகத்
     தணையானும்
புகுவா யறியார் புறநின் றோரார்
     போற்றோவார்
செகுவா யுகுபற் றலைசேர் கையா
     ரூர்போலும்
பகுவாய் நாரை யாரல் வாரும்
     பாசூரே.                  9


     8. பொ-ரை: புகழ்குன்றாத தெளிந்த நீரை உடைய கடலால்
சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக்
கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப்
பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான
நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.

     கு-ரை: தேசு-சூரியன் தன்மேல் செல்லாதிருப்பினும் சிவ பக்தியின்
முதிர்ச்சினயயுடைய அரசனது ஆட்சியாதலின் வையங்காக்கும் ஒளி.
குன்றா-குறையாத. தெள்நீர் இலங்கை-தெளிந்த நீரையுடைய கடல் நடுவிலே
உள்ள இலங்கை. கூச-மனம் கூசுதலடைய. வீரத்தால் நாண என்பதும்
பொருந்தும். வாள் கொடுத்த வரலாறு முன்னும் பின்னும் பலமுறை கூறப்
பெற்றுள்ளது. ‘கொடுப்பார் தம்மையே பேசி’ என்ற ஏகாரத்தை ஊன்றி
நோக்குதல் நன்று. பெருமை-இம்மை மறுமை நலங்களும் வீட்டின்பமும்.
பாசி-நீர்ப்பாசி. தடமும் வயலும் நீர்வளத்தால் பசுமை உடையவாதலை
உணர்த்தியது. இதனால் ஈண்டுப் பாசூரென்ற பெயர்க்காரணமும் நன்கு
விளங்குகின்றது.

     9. பொ-ரை: விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும்,
நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகு மிடம் அறியாதவராகவும்
புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும்
நிற்க அழிந்தவாயிற் பல்லுலுடைய தலையோடு சேர்ந்தகையினை உடையவர்.
சிவபெருமான் அவரது ஊர் பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல்
மீன்களை வௌவி உண்ணும் பாசூராகும்.

     கு-ரை: நகு வாய் மலர்-திறந்த வாயையுடைய தாமரை, நாகத்து
அணையான்-பாம்பணை மேலுறங்குபவன். புகு வாய்-சிவபெருமானைக்
காணப்புகும் இடம். ஓரார்-உணரார். போற்று-துதி. ஓவார்-ஒழியார்.
செகு-அழிந்த. வாய்-வாயிலிருந்து. பல் உக்க