|
கெளியா
னமரர்க் கரியான் வாழு
மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும்
வெண்காடே.
6 |
2130.
|
கோள்வித்
தனைய கூற்றந் தன்னைக்
குறிப்பினான்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த
மாணிக்காய்
ஆள்வித் தமர ருலக மளிப்பா
னூர்போலும்
வேள்விப் புகையால் வான மிருள்கூர்
வெண்காடே.
7 |
பொருந்தும் அடியவர்க்கு
எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய
சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற
திருவெண் காடாகும்.
கு-ரை: ஒளி கொள் மேனி உடையாய்!
உம்பராளீ என்று -
ஞானப்பிரகாசத்தைக் கொண்ட திருமேனி உடையவரே, தேவர்களை
ஆள்பவரே என்று துதித்து. அளியர் ஆகி-அன்பின் முதிர்ச்சியை
உடையராகி. அழுது உற்று ஊறும் அடியார்கட்கு எளியான்-உள்ளுருகியும்,
கண்ணீர் சொரிந்தும், (மெய்யன்பு) மிக்குத் திருவருளில் ஊறிய
அடியவர்கட்கு எளியவன்,அமர்ர்க்கு அரியான் - அழியும் இன்பத்தை
விரும்பும் தேவர்க்கு அரியவன். வெளிய உருவத்து ஆனை-
வெண்ணிறத்தைப்பெற்ற வடிவத்தை உடைய யானை. அடைந்து
அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடு
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் (தி.2 ப.184 பா.7,9).
7. பொ-ரை: உயிர்கவர்வதில் வித்துப்
போல்பவனாகிய கூற்றுவனை,
சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை
மகிழ்வொடு ஏத்திய சுவேத கேது முனிவரை அமருலகம் ஆளச் செய்து
அணி செய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற
திருவெண்காடு ஆகும்.
கு-ரை: கோள்-கொலை. கோள் வித்து-கொலைக்கு
விதை. அனைய-
போன்ற. கூற்றம்தன்னை-கூற்றுவனை, எமனை. குறிப்பி
|