பக்கம் எண் :

703

2131.







வளையார் முன்கை மலையாள் வெருவ
     வரையூன்றி
முளையார் மதியஞ் சூடி யென்று
     முப்போதும்
இளையா தேத்த விருந்தா னெந்தை
     யூர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த
     வெண்காடே.                          8


னால்-சிவத்தியாநத்தால்; ‘மறிதிகழ் கையினன் வானவர்கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணி’ (தி.4 ப.107 பா.4). மாள் வித்து- மாளச்செய்து. அவனை-
அச்சிவபெருமானை. மாணி-பிரமசாரி. சுவேதகேது முனிவர் (பார்க்க: தி.2
ப.48 பா.5).

     அமரர் உலகம் ஆள்வித்து அளிப்பான்-தேவ லோகத்தை
ஆளச்செய்து அருள் செய்வான், அளித்தல் அன்பின் முதிர்தல்.
வேள்விப்புகை-யாகத்தீயிலிருந்து எழும் புகை. இருள் கூர்-இருள்மிகும்.
‘முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி
அணவிக் குனிமதி மூடி நீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற
கொச்சைவயமே’ (தி.2 ப.83 பா.5).

     8. பொ-ரை: வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி
அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து.
முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு
எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட
வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

     கு-ரை: வளை ஆர் முன்கை-வளையல் பொருந்திய முன்கையை
உடைய. மலையாள்-இமாசலகுமாரி. வெருவ-அலற. வரை-கயிலைமலை.
முளையார் மதியம்-முளைத்தல் பொருந்திய இளம்பிறை. முப்போது-காலை,
பகல், மாலை. ‘வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழ நின்ற
முதல்வனை’ (தி.4ப.7பா.3).

     இளையாது-(மனம்) இளைப்புறாமல். விளை-விளைவு. ஆர்-நிறைந்த.
கழனி-வயல். பழனம்-நீர் நிலம். ‘செந்நெலங்கழனிப்பழனத்து அயல்’
(தி.2 ப.1 பா.1).