2132.
|
கரியா
னோடு கமல மலரான்
காணாமை
எரியாய் நிமிர்ந்த வெங்கள் பெருமா
னென்பார்கட்
குரியா னமர்க் கரியான் வாழு
மூர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும்
வெண்காடே. 9 |
2133.
|
பாடு
மடியார் பலருங் கூடிப்
பரிந்தேத்த
ஆடு மரவம சைத்த பெருமா
னறிவின்றி
மூட முடைய சமண்சாக் கியர்க
ளுணராத
வேட முடைய பெருமான் பதியாம்
வெண்காடே. 10 |
9.
பொ-ரை: கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான்முகனும்
அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே!
என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர்,
வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.
கு-ரை:
கரியான்-மாயன். கமல மலரான்-தாமரையில் வாழும் பிரமன்.
காணாமை-காணமாட்டாத வகை. எரி-தீப்பிழம்பு என்பார். கட்கு-என்று
துதிக்கும் அடியவர்களுக்கு. உரியான்-அருளும் உரிமை உடையவன்.
அமரர்க்கு அரியான் (பா.6). விரி-விரிவு. பொழிலின் - சோலைக்கண்.
10.
பொ-ரை: பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப் பரிவுடன் ஏத்த
ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண்
சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி
வெண்காடாகும்.
கு-ரை:
பாடும் அடியார்-பண்ணொன்ற இசை பாடும்
|