2134.
|
விடையார்
கொடியான் மேவி யுறையும்
வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங்
காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம்
ஆள்வாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
அடியார்கள். அரவம்.
பாம்பு-அசைத்த-கட்டிய. உணராத வேடம்-
உணரமாட்டாத சிவஞான வேடம்.
11.
பொ-ரை:
விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி
உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து
விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும்
இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத
வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
கு-ரை:
விடை ஆர்கொடியான்-எருது எழுதிய கொடியை
உடையவன். மேவி-விரும்பி. உறையும்-எழுந்தருளியிருக்கும். கடை ஆர்
மாடம்-கடைவாயில் பொருந்திய மாடம். இது காழிக்கு அடை. நடை-
ஒழுக்கம். ஞானசம்பந்தன் வெண்காட்டைத் தொழுத தமிழ் என்று ஒரு
சொல்வருவித்தியைக்க. வல்லார்க்கு வினைகள் அடையா. வல்லார்
அமரலோகம் ஆள்வார்.
|