பக்கம் எண் :

744

மாணந் தகைவது நீறு
     மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
     திருவால வாயான் திருநீறே.           4
2182.







பூச வினியது நீறு
     புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு
     பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
     அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
     திருவால வாயான் திருநீறே.           5


கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது. கவினைத்
தருவது - அணிவோர்க்குச் சிவப்பொலிவு தருவது. பேணி - விரும்பி.
பெருமை - திருவருட்சிறப்பு. மாணம் - இறப்பு. நிள் என்னும் பகுதி அம்
என்னும் விகுதியோடு சேர்ந்து நீளம் என்று ஆகின்றது. நிகள் என்பதன்
முதல் நீட்சியே நீள் என்பது. துகள் தூள் என்பது போல, அதுபோல;
மாள்+அம். மாளம். ளகரம் ணகரமாதல் இயல்பு; ‘நீணுதல் செய்தொழியந்
நிமிர்ந்தான்’ (தி.1 ப.1 பா.9) என்பதில் னகரம் ணகரமானதைக் காண்க.
பெள் - பெண். எள் - எண். தகைவது - தடுப்பது. மதி - இயல்பான
அறிவு. ‘மதிநுட்பம் நூலோடு உடையார்’ (திருக்குறள் 636). சேணம் -
உயர்வு. பாசத்தார்க்குத் தூரத்ததாகிய வீடுமாம்.

     5. பொ-ரை: திரு ஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது.
புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும்
முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்ப நிலையை
அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

     கு-ரை: பூசப்பூச இனிமையாக்குவது. சிவபுண்ணியத்தை வளர்ப்பது.
பெருமையைப் பேசப் பேச இனிமை உண்டாக்குவது. பெரிய
தவத்தோரெல்லார்க்கும் பற்றொழிப்பது. முடிவான பேரின்ப நிலையைத்
தருவது. அந்தம்-அழகுமாம். தேசங்களெல்லாம் புகழப் பெறுவது.