பக்கம் எண் :

743

2180.







முத்தி தருவது நீறு
     முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
     தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
     பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு
     திருவால வாயான் திருநீ்றே.        3
2181.



காண வினியது நீறு
     கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம்
     பெருமை கொடுப்பது நீறு


கொடிய பிறவித் துயரம் முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத்
தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. ஆசிரியர்
மாணக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது
அணியத் தகுதியுடையது. உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை -
மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.

     3. பொ-ரை: திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது.
முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது.
தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது.
வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

     கு-ரை: வீட்டை அளிப்பது; எல்லாச் செல்வங்களையும்
வெறுத்தவர் முனிவர். முனிவு - வெறுப்பு; கோபம். முனிவர் (முநிவர்) -
மனன சீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம்.
சத்திய - எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி -
திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த. சித்தி - எண்வகைச் சித்தி. அணிமா
முதலியன.

     4. பொ-ரை: திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை
தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை
கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

     கு-ரை: பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர்