|
தந்திர
மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருவால வாயான் திருநீறே. 1 |
2179.
|
வேதத்தி
லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருவால வாயான் திருநீறே. 2 |
கு-ரை:
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும்.
நினைத்தவரைக் காக்கும். வானவர்-சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர்.
மேலது-திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம்-அழகு; சிவப் பொலிவு.
துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம்-ஆகமம்.
சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது-சிவசமயத்தில்
அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் -
பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது.
உள்ளது - சிவம். ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் - (திருக்குறள்)
திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் -
மதுரைத் தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன்.
திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன் தொகையாதல் அறிவார்க்குத்
திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். கங்காளன்
பூசும் கவசத் திருநீற்றை. . பூசி மகிழ்வாரே யாமாகில். . . சாரும்
சிவகதி. . . . (திருமந்திரம்)
2.
பொ-ரை: குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திரு
ஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து
ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவ ஞானத்தைத்
தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத்
தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
கு-ரை:
திருநீறு வேதத்தில் சிறக்க எடுத்தோதப் பெற்றது.
|