பக்கம் எண் :

741

 66. திருவாலவாய்

பதிக வரலாறு:

     மதுரையில், அருகர்கூடி, தம்திருமடத்தில் இட்டதீயை, புகலிவேந்தர்,
இனி அரசன் எய்தும் வெப்பு அகலற் பொருட்டு, தீண்டி, வெண்ணீறு
இடுதற்குரிய பேறு உடையன் ஆதலின், பேரருளினால் ‘பையவே செல்க’
என்று ஏவிய வெப்பு நோய் தென்னனை மேவிற்று. முயன்ற பலராலும்
தீர்க்க முடியாதிருந்தது. “திருஞானசம்பந்தப் பிள்ளையார் கடைக்
கண்ணோக்கம் பெற்றால் பிறவி நோயே ஒழியும் எனின், இந்நோய்
ஒழிவதில் ஐயமில்லை” என்று குலச்சிறையார் கூறினார். ஞானசம்பந்தர்
என்ற திருப்பெயரைக் கேட்டதே பாண்டியனுக்கு ஓரளவு இன்பம்
உண்டாக்கிற்று. அதனால், அழைத்துவர அவன் வேண்டினான். சென்று
வணங்கி வேண்டி அழைத்தனர் அமைச்சர் முதலோர் திருவுளம்பற்றிப்
பிள்ளையார் எழுந்தருளினார். நோக்கும் புண்ணியனானான் காக்கும்
பாண்டியன். அவன் வெப்பு நோயை விலக்கப் பாடியருளியது இத்
திருநீற்றுப் பதிகம்.

திருநீற்றுப்பதிகம்

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 202   பதிக எண்: 66

திருச்சிற்றம்பலம்

2178.



மந்திர மாவது நீறு
     வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
     துதிக்கப் படுவது நீறு



     1. பொ-ரை: சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய
உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது
திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல்
பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது.
ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.