பக்கம் எண் :

740

     கு-ரை: ‘பெண்ணுரு. . . . அண்ணல்’ பெண்ணுருவமும்
ஆணுருவமும் அல்லாத அண்ணல். ’ஆணலார் பெண்ணும் அல்லார்
அதிகை வீரட்டனாரே’ (தி.4 ப.27 பா.8). ‘பெண் அல்லை ஆண் அல்லை
பேடும் அல்லை’ (தி.6 ப.45 பா.9). பிரமபுரநகர் மேய அண்ணல் -
பிரமபுரத்தில் எழுந் தருளிய தலைவர். ‘செய்யாதன எல்லாம்’ என்றதால்
முற்பாக்களில் உரைத்தவை சிவபிரான் செய்யாதவை என்றும்; பொருள்சேர்
புகழ் என்றும் உணர்த்தினார். வல்லவர்களாகிய அவர் வீற்றிருப்பார் என்று
இயைக்க. நண்ணிய - விரும்பிய.

ஞானசம்பந்தர் போற்றும் நாயன்மார்கள்

1. அமர்நீதி நாயனார் 379-1.
2. கண்ணப்ப நாயனார் 327-4, 374-7, 327-4, 367-7 293-7,    327-4.
3. குலச்சிறை நாயனார் 378-2, 4,6,8,10,11.
4. கோச்செங்கட் நாயனார் 277-1,2,5,9, 48-6, 159-5, 276-2,    4,6, 48-6, 199-7, 308-9.
5. சண்டேசுர நாயனார் 324-3,5, 62-4, 48-7, 62-4, 373-5,    326-10, 106-5, 201-2.
6. சிறுதொண்ட நாயனார் 321-1-11, 61-10.
7. திருநீலகண்டயாழ்ப்பாணர் 62-9, 378-6.
8. திருநீலநக்கர் 316-2, 11.
9. தில்லை வாழ் அந்தணர் 259-1,2,3, 80-1,2,11.
10. நமிநந்தியடிகள் 62-6.
11. நின்றசீர் நெடுமாறர் 309-2,4,5,6,7,8,9,10,11, 202-11, 378-2.
12. புகழ்த்துணை நாயனார் 199-7.
13. மங்கையர்க்கரசியார் 378-1,3,5,7,9,11, 297-1, 373-6.
14. முருக நாயனார் 228-3,5.