பக்கம் எண் :

739

உற்றல ரொன்றிலர் போலு
     மோடு முடிக்கிலர் போலும்
பெற்றமு மூர்ந்திலர் போலும்
     பிரம புரமமர்ந் தாரே.              10
2177.









பெண்ணுரு வாணுரு வல்லாப்
     பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லா
     மறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்த
     னவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக
     வீற்றிருப் பாரவர் தாமே.           11

        திருச்சிற்றம்பலம்



புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப் பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர்
நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர்.
ஒன்றுமில்லாதாரைப் போலத் தோன்றுபவர். தலையோட்டை முடியில்
தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.

     கு-ரை: வெறுமை அரைசீவரத்தார் - ஆடையில்லாச்சமணர்.
சீவரம் - பழுப்பேறிய ஆடை. ‘துவர் ஊட்டின சீலை’யும் ஆம்,
‘சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தார் ஆசாரம் அன்றோ மூத்தோர்
முன் இளையார் போர்வை வாங்குவது போல’ (நீலகேசி 3:13, உரை).
அற்றவர் - பற்று ஒன்றுமில்லாதவர். ‘அற்றவர்க்கு அற்ற சிவன்’
பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே’
(திருவா-514). நால்வர் - சனகாதியர். அலர் - பழி. முடிக்கு -
சடைமுடிக்கு. ஓடு - தலையோடு. ‘தலைமாலை தலைக்கணிந்து’
பெற்றம் - எருது.

     11. பொ-ரை: பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத
(மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை
உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக்
கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய
ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர்.