பக்கம் எண் :

738

புரைசெய் புனத்திள மானும்
     புலியி னதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த
     பிரம புரமமர்ந் தாரே.                8
2175.







அடிமுடி மாலயன் றேட
     வன்று மளப்பிலர் போலுங்
கடிமல ரைங்கணை வேளைக்
     கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப்
     பாற்கட லீந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும்
     பிரம புரமமர்ந் தாரே.                9

2176.


வெற்றரைச் சீவரத் தார்க்கு
     வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவ ரானிழ னால்வர்க்
     கறங்க ளுரைத்திலர் போலும்


     கு-ரை: பரசு - மழு. படுதலை - கபாலம். கோன் - இராவணன்.
அடர்த்திலர் - தாக்கிலர். புரை - பன்னசாலை. அதள் - தோல். பிரசம் -
தேன்.

     9. பொ-ரை: பெண்யானை போன்ற நடையினை உடைய
மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால்
பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம்
கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு
விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.

     கு-ரை: கடி - மணம். மலர் ஐங்கணை - ஐந்து பூங்கணை. வேள் -
(கரு) வேள்; மன்மதன். கனல - தீப்பொறி பறக்க. பாலன் - உபமன்யு
முனிவர். ‘பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடலீந்த பிரான்’.
பிடி - பெண்யானை.

     10. பொ-ரை: பிரமவுரம் பெருமான், வெற்றுடலோடும், சீவரம்
அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப்