2173.
|
பன்றியின்
கொம்பிலர் போலும்
பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக்
கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி
லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும்
பிரம புரமமர்ந் தாரே. 7 |
2174.
|
பரசு
தரித்திலர் போலும்
படுதலை பூண்டிலர் போலும்
அரச னிலங்கையர் கோனை
யன்று மடர்த்திலர் போலும்
|
அஃறிணைப் பெயர்
பெண்டிர் என்னும் உயர்திணைப் பொருட்டாய்
நின்றது. பெண்கள், ஆண்கள் என்னும் பிழை வழக்குப் பயிற்சியை
நோக்குக. சோர்விலாள் பெண் என்ற வள்ளுவர் காலத்துக்கு
முன்னேயே இவ்வாறு வழங்கியது போலும். மொய்த்து - (கூடி) நெருங்கி.
7. பொ-ரை:
பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம்
அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப்
பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு
கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித்திளைப்பவர்.
கு-ரை: பன்றியின் கொம்பு - ஏனக்கொம்பு.
ஏனமுளைக் கொம்பு
(தி.1 ப.1பா.2). பார்த்தற்கு - அருச்சுனனுக்கு. கன்றிய - கோபித்த. காலன் -
எமன். காலனைக் கால்கொடுபாய்ந்திலர். வீழப்பாய்ந்திலர் என்க. துன்று -
நெருங்கிய. துதைந்திலர் - நெருங்கிலர் பின்றி - பிந்தி. பின்றா நேசத்தால்
(திருவாசகம்). பீடு - பெருமை.
8. பொ-ரை:
தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த
பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட
பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக
விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக்
காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை
உடுத்தவர்.
|