2171.
|
தோடு
செவிக்கிலர் போலுஞ்
சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய
யானை யுரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலு
மொள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப்
பிரம புரமமர்ந் தாரே.
5 |
2172.
|
விண்ணவர்
கண்டிலர் போலும்
வேள்வி யழித்திலர் போலும்
அண்ண லயன்றலை வீழ
வன்று மறுத்திலர் போலும்
வண்ண வெலும்பினொ டக்கு
வடங்க டரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்தெழு செல்வப்
பிரம புரமமர்ந் தாரே.
6 |
5. பொ-ரை:
பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான்
ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட
கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில்
ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர்.
கு-ரை: செவிக்குத் தோடு இலர்போலும்
என்க. ஆடுகை. தடக்கை.
துதிக்கை ஆடுதலும் பரியதாதலும் வெளிப்படை. வலிய ஆனையை
உரித்தல் செய்யாதவர் போலும்.
6. பொ-ரை:
மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த
பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை
அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக்
கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர்.
கு-ரை: விண்ணவர் - விண்ணிடத்திலுள்ள
தேவர். வேள்வி -
தக்கன் யாகம். அண்ணல் - படைத்தற் கடவுள்; பெருமையுமாம். அயன் -
பிரமன். வண்ணம் - அழகு. அக்கு - உருத்திராக்கம். பெண்ணினம் -
மகளிர்கூட்டம். ஈண்டுப் பெண்ணென்னும்
|