|
மெய்த்த
நயன மிடந்தார்க்
காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும்
பிரம புரமமர்ந் தாரே. 3 |
2170.
|
நச்சர
வாட்டிலர் போலு
நஞ்ச மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங்
கங்கை தரித்திலர் போலு
மொய்ச்சவன் பேயிலர் போலு
முப்புர மெய்திலர் போலும்
பிச்சை யிரந்திலர் போலும்
பிரம புரமமர்ந் தாரே. 4 |
வந்த காளியின் கோபாவேசத்தைத்
தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள
கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம்
அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர்.
கு-ரை:
சித்தவடிவு-சித்தருருவம் போலும் உருவம். சித்துக்களில்
வல்லவரென்பதை உணர்த்தும் திருமேனி. தேசம்-நாடு. கதங்கள்-
கோப(ாவேச)ம். தவிர்த்திலர்-நீக்கிலர். மெய்த்த-மெய்யில் (உடம்பி) லுள்ள.
எய்த்த எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் சிறந்தது.
நயனம் - கண்.
இடந்தார்க்கு - போர்த்(து ஆயிரம் பூவென நிறைத்)த
திருமாலுக்கு. ஆழி - சக்கராயுதம். பித்தர் வடிவுபோலும் வடிவாம்.
4.
பொ-ரை: பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய
பாம்பைப் பிடித்து ஆடச் செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர்.
பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள
வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர்.
பிச்சை இரப்பவர்.
கு-ரை: நச்சு
அரவு-நஞ்சமுடைய பாம்பு (நஞ்சு-நச்சு, விஷம்). கச்சு-
அரையிற்கட்டும் கச்சு. மொய்ச்ச-மொய்த்த. வன்பேய் - வலியபேய்கள்.
பிச்சை இரத்தல்-பிச்சையிடுக என்று யாசித்தல்.
|