2168.
|
கூரம்
பதுவிலர் போலுங்
கொக்கி னிறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலு
மாமை யணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலுஞ்
சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும்
பிரம புரமமர்ந் தாரே. 2
|
2169.
|
சித்த
வடிவிலர் போலுந்
தேசந்
திரிந்திலர் போலுங்
கத்தி வருங்கடுங் காளி
கதங்கள்
தவிர்த்திலர் போலும் |
உள்ளன ஆதலின் இலர்
என உடையான் வினையாக்கியும் போலும்
என ஐயப்பொருட்டாக்கியும் உரைத்தருளினார். இலர் போலும் என்பது
உள்ளவர் என்னும் குறிப்புணர்த்துவது. இஃது இன்றும் உலக வழக்கில்
இருக்கின்றது. செல்வரை, வறியர்போலும் எனக் குறிப்புப் பொருள்
உணர்த்தக் கூறுதல் முதலியன வேலிலர் தரித்திலர் சடைக்கிலர் என்ற
மூன்று வகை வாய் பாட்டில் அடங்குமாறும் அறிக. சிவபிரான் செய்தனவாக
உள்ள அத்தனையும் உண்மை ஞானம் பெற்றார்க்குச் செய்யாதனவாய்த்
தோற்றும். அவற்றைச் செய்தனவாகக் கொண்டு வழிபடுவார்க்கே உண்மை
ஞானம் உண்டாகும். ஆதலின் அவற்றைப் பொய்யெனலாகாது.
2. பொ-ரை:
பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை
உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர்.
ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர்.
சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர்.
கு-ரை: கூர் அம்பு-கூரியபாணம். கொக்கினது
இறகு. ஆரம்-
மணிமாலை. ஆமை-முற்றலாமை (தி.1ப.1பா.2) தார்-கொன்றை) மாலை.
சண்டி-சண்டேசுரர். பேர்-திருநாமம்; பெயர் என்பதன் மரூஉவாகும்.
3. பொ-ரை:
பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம்
போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு
|