பதிக
வரலாறு:
137
- ஆவது பதிகத் தலைப்பிற் காண்க.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்:
201 |
|
பதிக
எண்: 65 |
திருச்சிற்றம்பலம்
2167.
|
கறையணி
வேலிலர் போலுங்
கபாலந் தரித்திலர் போலும்
மறையு நவின்றிலர் போலு
மாசுண மார்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும்
பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும்
பிரம புரமமர்ந் தாரே.
1 |
1.
பொ-ரை: பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூப நிலையில்
எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய
வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர்.
பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர்.
கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும்
என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள்
யாவும் உறுதிப் படுமாற்றை உணரலாம்.
கு-ரை:
கறை - குருதிபட்டுலர்ந்த கறுப்பு. வேல்; பகைவர் உடம்பிற்
பாய்ந்து உற்ற ரத்தம் உலர்ந்து கறுப்பாகும், வேலுக்குச் சாதியடை.
கபாலம்-பிரமகபாலம். தரித்திலர் - தாங்கிலர். மறை - வேதம். மாசுணம் -
பாம்பு. பறை - உடுக்கை. (டமருகம்). பாசம் - கயிறு. முதற்பத்துப்
பாக்களிலும் வரும் இலர்போலும் என்பது ஈற்றுப்பாட்டில் அண்ணல்
செய்யாதன எல்லாம் அறிந்து வகை வகையாலே. . . நவின்றன என்ற
கருத்திற் கேற்றவாறு பொருள் கொளற்பாலது பரமசிவன் உண்மை
(சொரூபநிலை) யில் இவை ஒன்றும் இல்லாத சச்சிதாநந்த சொரூபியாதலின்
செய்யாதன என்று எதிர்மறையில் கூறப்பட்டன. தடத்த நிலையாகிய
பொதுவில், உயிர்களுக்கு ஐந்தொழிலும், அருட்டொழிலேயாகச் செய்யும்
பொருட்டு, இவையெல்லாம் இறைவனுக்கு
|