பக்கம் எண் :

732

2166.

அறையார் கடல்சூ ழந்தண் காழிச்
     சம்பந்தன்
முறையான் முனிவர் வணங்குங் கோயின்
     முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட
     வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள்
     பிரியாரே.                      11

         திருச்சிற்றம்பலம்



இல்லார் - இரங்கும் உள்ளம் வாய்க்காதவர், வன்னெஞ்சரென்றபடி.
(அஃது) இல்லார்க்கு அயலான் என்றது அக்கனியும் மனம் இல்லாத சமணர்
கொள்கைகளுக்கு எட்டாமல் வேறாய் வேதாகமக் கொள்கைக்கு எட்டுமவன்
பரமேச்சுவரன் என்றவாறு. திருகல் - கோணல். வேய்கள் -மூங்கில்கள்.
முருகு - அகில் மரம். பணை - கிளை. சிறியமந்திகள் அகில் மரக்
கிளைமேலிருந்து சிறிது வளைந்த வேய்களில் தாவிக் குதித்து ஆடும் என்க.

     11. பொ-ரை: ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும்
வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால்
வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக்
கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய
எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.

     கு-ரை: அறை - முழக்கம். அம்தண்காழி - அழகும்
குளிர்ச்சியுமுடைய சீகாழி. முறையான் - வேதாகமமுறைப்படி. குறையாப்
பனுவல் - நிறைவுறப்பாடிய இத்திருப்பதிகத்தை கூடிப்பாட வல்லவர்கள்
சந்திரசேகரனாகிய எம்பெருமானுடைய திருவடி நிழலைப் பிரியாதிருந்து
பேரின்பம் நுகர்வர் என்றவாறு, அப்பேரின்பமே கொடுத்தலால்,
உலகின்பம் வேண்டுவார்க்கும் அதைக்கொடுத்தல் இப்பனுவலுக்கு மிக
எளிதின் இயலுவதொன்று எனக்கொள்க.