பக்கம் எண் :

731

கொல்லை வேடர் கூடி நின்று
     கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும்
     முதுகுன்றே.                     9
2165.







கருகு முடலார் கஞ்சி யுண்டு
     கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா
     னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச்
     சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய்
     முதுகுன்றே.                     10


திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத
சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று
கும்பிட அதனைக் கண்டு முல்லைக்கொடிகள் அருகில் இருந்துகண்டு,
அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.

     கு-ரை: அல்லி - அகவிதழ்கள். அரவின் அணை - பாம்பாகிய
படுக்கை. பிரமனும் விண்டுவும் என்றவாறு, சொல்லி - தோத்திரம் புரிந்து.
பரவி - வாழ்த்தி. தொழ - வழிபட. ஒண்ணா - ஒன்றாத, பொருந்தப்
புண்ணியஞ் செய்யாதவராயினர் என்றவாறு. சோதி - தீப்பிழம்பாய்த்
தோற்றிய சிவபிரான் சோதியினது ஊர் முதுகுன்று என்க. முல்லை -
(குறிஞ்சியை அடுத்த) முல்லைத்திணை. அயல் - பக்கம். முறுவல் -
புன்னகை. முதுகுன்று - குறிஞ்சி, அதனை அடுத்துள்ள முல்லை, தன்பால்
பூத்த முல்லைப்பூக்கள் ஆகிய பற்களைக்காட்டிப் புன்சிரிப்புச்
செய்யுந்தோற்றத்தையுடையது.

    10. பொ-ரை: கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று
இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய்
விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள்
சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின்
மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.

     கு-ரை: கருகும் உடலார் - கரிய உடம்பினர், ‘காரமண்
கலிங்கத்துவராடையர்’ (தி.1ப.54 பா.10) கடு - கடுக்காய். உருகு சிந்தை