பக்கம் எண் :

730

      * * * * * * * *              7
2163.







வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை
     வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா
     னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று
     புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை
     முதுகுன்றே.                    8
2164.



அல்லி மலர்மே லயனு மரவின்
     அணையானும்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச்
     சோதியூர்


சோலைக்கு வன்மை கொள்ளப்படும். மொய்ப்பு (-நெருக்கம்) என்றதன்
மெலித்தல் எனல் சிறந்ததன்று.

    7. * * * * * * *

    8. பொ-ரை: மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ்
வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற
கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும்,
வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.

    கு-ரை: வாசம் - மணம். வேந்தை - அரசனாகிய இராவணனை.
வேந்து - சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை ஒற்று
முதலியனவும் அன்னவையே. பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
வண்டுமூசிப் பாடுஞ் சோலையை உடைய முதுகுன்று என்க. செய்த அடியார்
என்று இறந்த காலத்தாற் கூறியதால், செய்யாதிருந்த காலமும் உண்டோ
என்று ஐயுறலாகாது. அடியவர்கள் சிவபெருமானைப் பூசை செய்ததும்
எழுந்து நின்று திருமுன் மலர்களைத் தூவி, துதிபாடியேத்தி, வேர்த்தும்
புரண்டும் விழுந்தும் எழுந்து வழிபடும் கடமையுடையவர்கள்.

    9. பொ-ரை: அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும்
பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்