2162.
|
வம்பார்
கொன்றை வன்னி மத்த
மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமா
னுறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை
குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு
முதுகுன்றே. 6
|
கு-ரை:
வைத்தநிதி - சேமவைப்பாகவைக்கப்பெற்ற செல்வம்.
வைச்சபொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய அச்சம்
ஒழிந்தேன் (தி.1 ப.80 பா.4) வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி
மனத்து அடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்றிருக்கின். . . அத்தன்
அருள் பெறலாம்.. . . .நெஞ்சே (தி.1 ப.94 பா.5) வைத்த மாடு (தி.2
ப.72
பா.1 ப.77 பா.7). மணி - மாணிக்கம். வருந்தி -வழிபடாது கழிந்த காலத்தை
எண்ணி வருந்தி. கட்டு வீடு இரண்டிலும் உபகரித்துவரும் பரசிவனை
மறவாது வழிபட முயன்று. சித்தம் -சிந்திக்கும் மனம். நைந்து - மெலிந்து.
சிவனே என்பார் சிந்தையார் -சிவசிவா என்று திரி கரண சுத்தியுடன்
அழைத்திடும் அடியவர் சித்தத்தில் வாழ்பவர். சந்து - சந்தனமரம். குரவு -
குராமரம். உந்தும் முத்தாறு - தள்ளுகின்ற (மணி) முத்த நதி. மணியாலும்
முத்தாலும் கலந்து ஓடும் ஆறு மணி முத்தாறு. திருமுதுகுன்றத்தருகில்
ஓடும் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டது.
6.
பொ-ரை: மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த
மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும்
பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடிவகை
முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய்
விளங்கும் சோலைகளை உடைய முது குன்றாகும்.
கு-ரை:
வம்பு - மணம். வன்னி - சிறந்த பத்திரம் ஆகக்
கொள்ளப்பட்ட வன்னிமரத்திலை. மத்தம் - ஊமத்தை. தூவி -அருச்சித்து.
நம்பா என்று - நம்பனே என்று பூரண பக்தியுடன் அழைக்க. நல்கும் -
வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும். கொகுடிமுல்லை என்பது விசேடம்.
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்
(தி.7 ப.30 பா.1) எனத் திருக்கருப்பறியலூர் திருப்பதிகத்தில், நம்பியாரூரார்
அருளியதுணர்க. மொய்ம்பு-வன்மை. மரச்செறிவு, உயர்ச்சி, உறுதி
முதலியவற்றால்
|