2183.
|
அருத்தம
தாவது நீறு
அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருவால வாயான் திருநீறே.
6 |
2184.
|
எயிலது
வட்டது நீறு
விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
திருவால வாயான் திருநீறே.
7 |
6. பொ-ரை:
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயான்
திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மன வருத்தத்தைத்
தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக
இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.
கு-ரை: செல்வமாவது துன்பம் போக்குவது.
வருத்தம் ஒழிப்பது.
வானம் - துறக்கம்; சிவலோகம். அளிப்பது - கொடுப்பது. சிறப்பாகச்
சைவசமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச்சமயத்தார்க்கும்
பொருத்தமாயிருப்பது திருநீறு. சிவ புண்ணியத்தை உடையவரும் பசு
புண்ணியத்தை உடையவரும் ஆகிய சைவர் பூசுகின்ற வெண்ணீறு.
திருத்தகு மாளிகை - அழகு தக்க மாளிகைகள்.
7. பொ-ரை:
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை
ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது.
இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது.
செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.
|