பக்கம் எண் :

748

2185.







இராவணன் மேலது நீறு
     வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
     பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
     தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
     யால வாயான் றிருநீறே.             8
2186.



மாலொ டயனறி யாத
     வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண்
     மெய்யது வெண்பொடி நீறு


     கு-ரை: எயில் - திரிபுரம். அட்டது - எரித்தது. அது என்பது
பகுதிப் பொருள் விகுதி. இருமை - இம்மை மறுமை. பயிலப்படுவது -
திருநீற்றை அணிந்து அணிந்து பழகினாலன்றி அதன் பயனை
எய்துவதரிது. பாக்கியம் - செல்வம், அருள், துயிலை - கேவலத்தையும்,
சகலத்தையும், சுத்தமதாவது - சுத்தாவத்தையாய் விளங்குவது. அயில் -
கூர்மை. பொலிதரு - விளக்கம் செய்கின்ற.

     8. பொ-ரை: பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய
திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால்
எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக
இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

     கு-ரை: இராவணன் மேலது - திரிலோக சஞ்சாரியாகிய இராவணன்
தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல்
அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா
நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும்
உண்மை எண்ணத்தக்கது. பராவண்ணம் ஆவது -பராசக்தி சொரூபமானது.
அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் -
தத்துவம்; மெய்ப் பொருள். அரா -பாம்பு. வணங்கும் - வளையும்; தாழும்.
அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.

     9. பொ-ரை: நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு,
திருமால் பிரமர்களால் அறியப் பெறாத தன்மையை உடை