பக்கம் எண் :

749

ஏல வுடம்பிடர் தீர்க்கு
     மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
     மால வாயான் றிருநீறே.           9
2187.







குண்டிகைக் கையர்க ளோடு
     சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு
     கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா
     ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து
     மால வாயான் றிருநீறே.           10


யது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது.
பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

     கு-ரை: மேல் - வி்ண்ணுலகம். உறை - வாழ்கின்ற தேவர்கள்.
தங்கள் மெய்யது - தேவர்களுடைய உடம்பிற் பூசப்பட்டது. பொடி -
நீறு. ஒரு பொருட் பல்பெயர். உடம்பு இடர் ஏலத்தீர்க்கும் இன்பம் -
உடம்பெடுக்கும் துன்பத்தைப் பொருந்தப் போக்கும் இன்பம்.
உடம்பிலுள்ள இடருமாம். ஆலமது - நஞ்சு. மிடறு - திருக்கழுத்து.

     10. பொ-ரை: மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும்
திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள்
சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது.
எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால்
ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

     கு-ரை: குண்டிகை - கமண்டலத்தை ஏந்திய. கையர்கள் - கீழ்
மக்கள். கண் திகைப்பிப்பது - கண் திகைக்கச்செய்வது. கருத - தியானிக்க.
எண் திசைப்பட்ட பொருளார் - எட்டுத்திசையிலும் பொருந்திய சிவமாகிய
மெய்ப்பொருளை அடைந்தவரும், விரும்பினவரும், வழிபடுபவருமாகிய
சைவர். அவர் ஏத்தும் தன்மையுடையது. அண்டத்தவர் - மேலுலகத்தவர்.