மூர்த்திகள் அருளாணைப்படி
செந்தில்வேலு முதலியாரால் தலமுறைப்படி
அடங்கன் முறையைத் தமிழ்த்திருநாடு தவமெனப் பெற்றது.
தருமைத் திருமடத்தின்
ஞானபுத்திரமடமாகிய திருப்பனந்தாட்
காசிவாசி இராமலிங்கசுவாமிகள் அருள்பெற்று விஷுஆண்டு மார்கழித்
திங்களில், மற்றொரு அடங்கன்முறைப் பதிப்பு ஞான சம்பந்தப்
பிள்ளையால் செந்தமிழ்த் திருநாட்டுக்குக் கிடைத்தது. பல்லாண்டுகட்குப்பின்
இன்றும் திருமுறைப் பணியைத் தொடர்ந்து புரிகிறது நம் திருமடம். இப்பணி
நிலத்தினும்
பெரிதே வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரளவின்று |
என்று பாராட்டுவதல்லால்
கைம்மாறு வேறு யாது?
இக்குறிப்புரை,
இரண்டாம் திருமுறையின் பொருள் உணர்ச்சி என்ற
பூங்காவுக்கோர் புனித முகப்பு. வாழும் தமி்ழின் வளமான பாதைக்கோர்
வழிகாட்டி. காழியர் தவமாகிய ஆளுடைய பிள்ளையாரின் திருவுள்ளத்தைத்
தெள்ளிதின் காட்டும் கண்ணாடி. சைவர் அகந்தோறும் சான்றாண்மை பரப்ப
முற்பட்டிருக்கும் தெய்வத் தென்றல். தமிழ்நாடு தவம் செய்தநாடு. ஆம்,
தருமைத் திருமடமும், தமிழ் வெளியீடுகளும் ஒருமுகமாகப் பெற்றுச்
சிவானந்தப் பெருங்கடலில் திளைப்பது செந்தமிழ்த் திருநாடுதானே!
வாழி வையகம்!
வாழிய சைவம்! வாழிய எம்தருமை ஆதீனத்
திருமடம்! வாழிய எங்கள் முதல்வர் திருவடி!
வாழ்க
அந்தணர் வானவர் ஆனினம்!
வீழ்க தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர்தீர்கவே! |
|