பக்கம் எண் :

74

     திருமுறைக்கு உரை எழுத ஆதரவுதந்த தருமையின் 25-ஆவது
குருஞானசம்பந்தரை-தமிழ்நாட்டின் ஞானவிளக்கை-தவநெறிக்குன்றை-
தமிழ் வளர்க்கும் ஆரமுதை-செந்தமிழ்க் குருமணியைத் தக்க இடத்தில்
போற்றிப் புகழ்ந்துள்ளார்; திருக்கடவூர் மயானத்துப்,

‘பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்’

                                           (பதி.216-7)

என்றவிடத்து, ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானமவர்கள் இப்பாடலுக்குக்
கூறியருளிய விளக்கத்தையும், ஆசைதீரக்கொடுப்பார் என்ற தொடர்க்குக்
கூறியருளிய நயத்தையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். இஃது ஆசிரியர் திரு.
முத்து, சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள் குருமகாசந்நிதானம்
அவர்களது திருவருள் வளத்தில் தோய்ந்திருக்கும் மாண்பும் பணிவோடு
கூடிய நன்றிமறவாப் பாங்கும் கொண்டவர்கள் என்பதனைத் தெளிவுறுத்தும்.

வாழிய வையகம்:

     குறிப்புரை மாட்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கிக்
கொண்டே போவோமானால் காலமும் கருத்தும் விரியும். ‘உரைப் போர்
உள்ளக் கருத்தினளவே பெருமை’ என்பது வல்லார் வாய் மொழி. எனவே
விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்துகிறேன். இன்னோரன்ன மாட்சிகள் பலவும்
செறிந்த மாற்றுயர்ந்த பசும் பொன்னை வார்த்து நல்லணி ஆக்கினாற்
போன்ற-அழகு பொங்கிப் புது நலம் துளிர்க்கும் குறிப்புரையைத் தக்க
தமிழ்ப் பேராசிரியரின் வாயிலாகத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தருளிய
எங்கள் குருமகாசந்நிதானமவர்கள் பெருங்கருணைத் திறத்தை என்னெனப்
பேசுவது! ‘குறிப்புரையால் குவலயம் குறிக்கோளை உணர்ந்து தெய்வீக
உணர்வு கொள்ளட்டும், என்ற அவர்கள் திருவுள்ளக் குறிப்புக்குத்
தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

     தருமைத்திருமடம் இன்று திருமுறை வளர்ச்சிக்குப் பெருகிய
தொண்டு செய்து பேணுமாபோல், பண்டும் ‘மிகு சைவத்துறை விளங்கத்’
திருமுறைப் பணியும் செய்துளதென்பதனை அறிவுலகம் அறியும்.
இன்றைக்குச் சற்றேறக்குறைய அறுபதாண்டுகளுக்கு முன்னே, விசய
ஆண்டு சித்திரைத் திங்களில், தருமை ஆதீனத்துத் தவப்பெருந்தலைவராக
வீற்றிருந்தருளிய ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக