|
வெள்ள
நகுதலை மாலை
விரிசடை மேன்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே. 3 |
2192.
|
ஆடலிலைய
முடையார்
அருமறை தாங்கியா றங்கம்
பாடலிலைய முடையார்
பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊடலிலைய முடையார்
யோகெனும் பேரொளி தாங்கிப்
பீடலிலைய முடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.
4 |
கங்கை சிரிக்கும்
தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல்
பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும்புலியூரில்
பிரியாது உறைகின்றார்.
கு-ரை: கள்ள
மதித்த கபாலம் - கள்ளத்தைக் கருதிய பிரமனது
கபாலம். முதல் வினை சினைமேல் ஏற்றப்பட்டது. அதைக் கையில் ஏந்தித்
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலுடையவர் என்று சிவபெருமான்
நடனமாடுங்காலத்துக் கபாலத்தைத் தாங்கியிருந்த உண்மை கூறப்பட்டது.
எழில்மிகு செல்வர் - சென்று அடையாமையாகிய அழகுமிக்க செல்வத்தை
உடையவர். வெள்ளம் - கங்கை. நகுதலை மாலை - சிரிக்கின்ற தலைகளின்
வரிசை. பிள்ளைமதி - இளம்பிறை.
4. பொ-ரை:
நடனலயம்
உடையவர். அரிய நான்கு மறைகளைத்
தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப்
பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம்
இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை
மேற்கொண்டு பெருமை பொருந்திய நள் இரவில் நடனம் புரிபவர். அவர்
பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
கு-ரை:
ஆடல் இலையம் - நடனலயம். ஆறுஅங்கம் - சிக்கை.
கற்ப சூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்
|