பக்கம் எண் :

754

2193.







தோடுடை யார்குழைக் காதிற்
     சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங்
     கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப
     நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார்
     பெரும்புலி யூர்பிரி யாரே.           5


என்பன. பாடல் இலயம் - சங்கீதலயம். பன்மை ஒருமை செய்து - அநேகம்
ஏகம் என்னும் நிலைமைகளைத் தோற்றி. அஞ்சும் -ஐம்பொறிகளும்.
ஊடலில் - ஊடுதலாலே. (ஐம்பொறி அடக்கம் இல்லாமையால்) ஐயம்
உடையார் - மெய்ப்பொருள் நிச்சயமின்றி் ஐயப்படுதலுக்குரியார். யோகு -
யோகம். யோகநெறி; ஒளிநெறியாதலின் யோகெனும் பேரொளி என்றார்.
பீடு அல் - பெருமையுடைய நள்ளிரவில். இலயமுடையார் - நட்டம்
பயிலுதலுடையார். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் ஆற்றல் யோகெனும்
பேரொளி தாங்கியிருத்தல் கொண்டே ‘உறைந்ததோர் ஒளியதாக்கி
ஒடுங்கிடின் யோகபூசை’ (ஞானபூசாகாரணம்-14) என்பதும், ஞானி யோகி
கிரியா வான்முறையே அறிவிற்கறிவாகவும் அறிவில் ஒளியாகவும் அறிவில்
மூர்த்தியாகவும் தியானிப்பர் என்பதும், ‘மூன்றும் பெறின்புறப் பூசை யாமே’
(ஞான-14) என்பதும் ‘மூன்றும் உணர்வும் ஒளியும் மூர்த்தியும்’ என்பதும்
தருமையாதீனத்து முனிவருள் ஒருவராகிய ஸ்ரீமத் சட்டைநாதத் தம்பிரான்
சுவாமிகள் குறிப்புரையால் உணரத் தக்கன. இதனால் யோகியர் யோகெனும்
பேரொளி தாங்கும் உண்மை புலப்படும்.

     5. பொ-ரை: பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர். ஒரு
காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப்
பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர்.
எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும்
உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும்
விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர்.
அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகி்றார்.

     கு-ரை: குழையணிந்ததொரு காதில். தோடணிந்ததொரு காதில்.
காதில் திருநீறணிதல் உணர்த்தப்பட்டது. காட்டில் தீயில் ஆடுபவர்.
கையில் எரி ஏந்தியவர். கடல் சூழ்ந்த நாடெல்லாம்