பக்கம் எண் :

778

அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்
     காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம்
     பரவு மூரே.                         1
2223.



வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு
      வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம்
      புறவங் காழி


     கு-ரை: 1. பிரமபுரம், 2. வேணுபுரம், 3. புகலி, 4. வெங்குரு, 5.
தோணிபுரம்., 6. பூந்தராய், 7. சிரபுரம், 8. புறவம், 9. சண்பை, 10. காழி, 11.
கொச்சைவயம், 12. கழுமலம் ஆகிய திருப்பெயர்களை இம்முறையே
தனித்தனி முதலிற்கொண்டு தொடங்கும் திருப்பாடல் இப்பதிகத்திற்
காணப்படுகின்றன. ஈற்றுப்பாடல் மட்டும், ‘கழுமலத்தின் பெயரை’
என்றுரைக்கும் காரணம் பற்றியும் ஒவ்வொரு பாட்டிலும்‘கழுமலம்’ என்று
வருதல் பற்றியும் கழுமலம் என்று தொடங்கிற்றிலது. இம்முறையே, சேக்கிழர்
சுவாமிகளும்,

“பிரமபுரம் வேணுபுரம் பெருபுகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்”.

பெரிய. திருஞான. 14) என அருளியிருக்கின்றார். (பார்க்க: தி.2 ப.109,110).
மன்னு - நிலைபெற்ற. பொன் அம் - பொன்னையும் அழகையும் உடைய.
அரன் மன்னு தண்காழி - சிவபிரான் எழுந்தருளிய குளிர்ந்த காளீச்சரம்.
உள்ளிட்டு - உட்பட்டு. அங்கு ஆதி ஆய பரமன் ஊர், பன்னிரண்டாய்
நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊர். ஊர் பன்னிரண்டே அன்றி ஓர்
ஊர்க்குப் பேர் பன்னிரண்டல்ல. இவ்வுண்மை அறியாதார் ஒரே ஊர்க்குப்
பன்னிரண்டு பெயர்கள் உள்ளன என்று எழுதியும் பேசியும் தொன்மையை
அழித்தனர். தலபுராணத்திலும் தொன்மை மாறாத உண்மை
உணர்த்தப்பட்டது.

     2. பொ-ரை: நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை
உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய
வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.