பதிக
வரலாறு:
சைவசமயத்தின்
பரமாசாரியரான வண்டமிழ் விரகர் குலச்சிறையாரும்
மங்கையர்க்கரசியாரும் உடன் வரச்சென்று, தண்டமிழ்நாட்டு மன்னனை
உய்யக்கொண்டருளும்போது, அவ்வேந்தன், வானகத்தினின்றும்
மண்ணகத்திருளை நீக்க வந்த செழுங்கலைத் திங்களைப் போன்ற
ஞானசம்பந்தப்பெருமானைக் கண்ணாரக் கண்டு கையாரத்தொழுது தன்
தலைப்பால் பொற்பீடங்காட்டி எழுந்தருள்வித்தான். அப்பீடங்காட்டிய
குறிப்பாலும் அதில், பெருமான் அமர்ந்த குறிப்பாலும் அமணர்க்கு உள்ளே
அச்சம் உண்டாயிற்று. அருட் பிள்ளையார் தெருட்பார்வையால், செழியன்,
பிணி சிறிது ஒழியவும் உள்ளம் ஒழுங்குறவும் நோக்கி, தேவரீர் திருப்பத
யாது என்று விருப்புடன் கேட்டான். அப்பொழுது, பொன்னிவளநாட்டுக்
கன்னிமதிற் கழுமலம் நாம் கருதும் ஊர் என்று சிறந்த பன்னிருபெயரும்
உணர்த்துவது இத்திருப்பதிகம்.
திருச்சக்கரமாற்று
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்:
206 |
|
பதிக
எண்: 70 |
திருச்சிற்றம்பலம்
2222.
|
பிரமனூர்
வேணுபுரம் புகலி வெங்குருப்
பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம்
புறவஞ் சண்பை |
1. பொ-ரை: இத்திருப்பதிகம்
சீகாழியின் பன்னிருதிருப்
பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக
அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக்
கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம்
உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.
|