பக்கம் எண் :

780

2225.







வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை
     வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம
     புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண்
    டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங்
     கருது மூரே.                       4
2226.







தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத்
     துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர்
     எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன்
     நகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம்
     புகழு மூரே.                      5

     4. பொ-ரை: நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம்
உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த
சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.

     கு-ரை: தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய
தோணிபுரம் என்றதால், தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு -
கூடிய. தொல் - பழைய. பொழில் - சோலை. தலைபண்டு ஆண்டமூதூர் -
சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான்.

     5. பொ-ரை: நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம்
முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல
பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய
கழுமலமாகும்.

     கு-ரை: தொல் நீர் - பழைய பிரளய வெள்ளம். துயர் - பிறவித்துயர்
(பிறதுயர்கள் இதனுள் அடக்கம்). இன்நீர் - இனிய நீரினை