2227.
|
தண்ணந்
தராய்புகலி தாமரையா னூர்சண்பை
தலைமு னாண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர்
அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர
மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது
கருது மூரே. 6 |
2228.
|
சீரார்
சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு
புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ
டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர
மென்றென் றுள்கிப்
பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய
பெருமா னூரே. 7 |
யுடைய. எழில் - அழகு.
நல்நீர, - நல்ல நீரினையுடைய. சிலம்பன்
நகர் - சிரபுரம்.
6. பொ-ரை:
நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய்
முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய
இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய
சிவபிரான் மேவிய கழுமலமாகும்.
கு-ரை:
தண் அம்தராய் - பூந்தராய். தாமரையான் ஊர் - பிரமபுரம்.
தலைமுன் ஆண்ட அண்ணல் நகர் - சிரபுரம். விண் -ஆகாயம். இயல் -
செல்லும். சீர் - கனம், புகழ் மேலார் - தேவர், மேன்மையுடைய ஞானியர்
முதலோர். மேவிய - விரும்பி எழுந்தருளியுள்ள. தியானம் புரியும்போது
கை தொழுத வண்ணம் இருத்தல் வேண்டும். அஞ்சலி செய்திருந்து (ஞான
பூசா விதி-8). பா.3 குறிப்புரை பார்க்க.
7. பொ-ரை:
சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம்
நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப்
|