2229.
|
புறவஞ்
சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு
புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய்
நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன்
மேலம் பெய்து
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ்
சேரு மூரே.
8
|
2230.
|
சண்பை
பிரமபுரந் தண்புகலி வெங்குருநற்
காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய்
புறவம் பார்மேல் |
பிரியாதவனாய், திருமாலும்
பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய்
உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.
கு-ரை:
சீர் ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல
ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று:-
அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் -
பெயராதவனாய். பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி
அமையும். பேரானாய்க் காண்பு என்க.
8.
பொ-ரை: நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக
வேணுபுரம்
உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு
விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது
கழுமலமாகும்.
கு-ரை:
நறவம் - தேன். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறல் -
பெருமை. விசயன் - அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன்.
செற்றான் - அழித்தான்.
9.
பொ-ரை:
நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள்,
சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை
முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.
|