|
நண்பார்
கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர
நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த
விமல னூரே. 9
|
2231.
|
செழுமலிய
பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப்
புகலி
செய்ய
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ்
சண்பை
யாய
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர
மிகுநன்
மாடக்
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான்
கருது மூரே.
10
|
2232.
|
கொச்சை
வயம்பிரம னூர்புகலி வெங்குருப்
புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள்
சண்பை மூதூர் |
கு-ரை: சாலாப் பண்பு - அழியாக்குணம்.
பண்பார் - குணத்தார்
எனினுமாம். நாண் - நாணம். வியப்பு - பெருமை. விமலன் - அநாதி
மலமுத்தன்.
10. பொ-ரை:
செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம்
ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.
கு-ரை:
செழுமலிய - செழிப்பு மலிதலையுடைய. செய்ய
கொழுமலரான் நன்னகரம் - பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ்.
பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.
11. பொ-ரை: நாம்
விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத்
தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.
|