பக்கம் எண் :

784

நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர
     மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம்
     அமரு மூரே.                          11
2233.







காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின்
     பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற்
     பனுவன் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம்
     பந்தன் சொன்ன
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை
     விருப்பு ளாரே.                       12


                     திருச்சிற்றம்பலம்

     கு-ரை: நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா -
ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும் இடத்தாலும் நெடுமை பொருந்திய.
நச்ச இனிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை.
அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான்
என்று வருதல்போல.

     12. பொ-ரை: குவளை மலர் போலும் கண்களை உடைய
மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க
பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன்
பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில்
ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.

     கு-ரை: காவி - நீலோற்பலம், கருங்காவி. புரையும் - ஒக்கும்.
பாவிய - பரவிய. பத்திமை - அன்பு. மை விகுதி தமிழ் ‘பத்திமையாற்
பணிந்து’. (தி.6 பதி.54 பா.3) தலைவிருப்பு - தலையன்பு.