2329.
|
செடி
கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த்
தேரைவாய்ச்சிறு
பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று
கருதி
னாயே |
புனிதமான கங்கை தங்கிய
சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர்
சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
கு-ரை:
அவமிலா நெஞ்சம் (பெரிய. திருஞா. 518) உயிர்க்குப்
பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள், மற்றையெல்லாத் துன்பங்களும்
அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால் உண்டாவதே, தோற்றம்
உண்டேல் மரணம் உண்டு (தி.7 பா.63) பிறந்தால் பிணிப்பட
வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன்
பிறப்பினைநான் (தி.4 ப.20 பா.8) கெடுவது இப்பிறவி சீசீ (தி.4
ப.76 பா.,10).
துறவு வீடு பேரின்பத்தைக் கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும்
கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும். ஆதலின், பிறவியால் கேடு
வருவன உள. ஆதலின் பெரிய இன்பத் துறவியாரானார் என்றருளினார்.
துறவியார்க்கே துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம் நீங்காது என்று
சோர்ந்தது நெஞ்சு தூங்குதல்-சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச்
சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (-மறவாதே). மார்க்கமே
நண்ணினாய்-சன்மார்க்கத்தினையே சேர்ந் தாய். மார்கர கண்ட நூலோதி
வீடு காதலிப்பவர் (சித்தியார்.) என் புழிப்போல நின்றது. தயாமூலதன்மம்
என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும்
நம்பி (தி.6 ப.20 பா.6). யாயிருத்தலாலும் தயாமூலதன்மவழி எனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண் என்றதில் அடியார்க்கு நல்கும்
தயாமூலதன் மவழி யுடையனாதலாலும் அறவாழியந்தணன் சிவனே. அறப்
பெருஞ் செல்வி சிவையே. அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய
அறத்தின் ஏகதேசமே ஏனையோரபால் இருப்பது. பிறவி அறுப்பீர்காள்.
அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே என்றதை (தி.1 ப.91 பா.2).
மறவல் நெஞ்சமே (தி.1 ப.90 பா.8). என்பதனோடு ஒப்பு நோக்கியுணர்க.
மறவன் என்று பிரிப்பது மறமன்றி அறமாகாது.
6. பொ-ரை:
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின்
வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும்
பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல்
|