|
சாதியார்
கின்னரர் தருமனும் வருணர்க
ளேத்து
முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
டஞ்ச னெஞ்சே. 4 |
2328.
|
பிறவியால்
வருவன கேடுள வாதலாற்
பெரிய வின்பத்
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத்
தூங்கி னாயே
மறவனீ மார்க் மே நண்ணினாய் தீர்த்தநீர்
மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
டஞ்ச னெஞ்சே. 5
|
4. பொ-ரை:
நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள்
பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய்
உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய்.
நற்குலத்தில் தோன்றிய கின்ன. தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப்
போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால்
நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு
அஞ்சாதே!
கு-ரை:
நெஞ்சே, நீதிவழியே வாழவில்லை, காலம்பல வீணே
கழிக்கின்றனை. நாளும் நோய்கள் வருத்தா. நோய்கள் வாதியா நாள்
செலா நின்றன என்று கொண்டு கூட்டுக. வாதியா-வாதித்து. வருத்தி, இதற்கு
வாதிப்பனவாயின என்றுரைப்பது எவ்வாறு? நாளும், நாளும் இன்பத்தையே
பொருந்தினாய். சாதி-குலம். ஆர்-பொருந்திய. கின்னரரும் தருமனும்
வருணனும் வழிபட்டனரென்று குறித்தார். ஆதியாரூர் என்றது காவிரி
நாட்டிடைத் தொன்மையில் மிக்கது. திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ
பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே என்ற கருத்தைக்
குறித்தது. ஆதியின் ஆரூர் என்றலுமாம். ஆதிபாதமே ஓதி உய்ம்மினே
(தி.1 ப.90 பா.3).
5.
பொ-ரை: நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும்.
பெரிய
இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என
மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய
நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய்,
|