2326.
|
நிணங்குடர்
தோனரம் பென்புசே ராக்கைதா
னிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக்
குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலு
மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
டஞ்ச னெஞ்சே. 3 |
2327.
|
நீதியால்
வாழ்கிலை நாள்செலா நின்றன
நித்த நோய்கள்
வாதியா வாதலா னாளுநா ளின்பமே
மருவி னாயே |
உய்யலாம். நெஞ்சே
மையல்கொண்டு அஞ்சாதே. முதலாவது விளி அதன்
போக்கை உணர்த்த. இரண்டாவது விளி அதற்கு அபயம் அளிக்க.
3.
பொ-ரை: நிணம், குடல், தோல், நரம்பு, என்பு
இவற்றால்
இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க்
கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ
நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி
மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம்.
மையல் கொண்டு அஞ்சாதே!
கு-ரை:
யாக்கை (-கட்டப்பட்டது, உடம்பு) ஆக்கை என்று ஆயிற்று.
யகரமெய் முதலிற்கொண்ட சொற்கள் அதனை ஊர்ந்த ஆமுதலாய்
வழங்கப்படுதல், யாறு - ஆறு, யாமை - ஆமை, யாய் - ஆய், யாண்டு -
ஆண்டு, யானை - ஆனை முதலியவற்றிற் காணப்படும். நிலாயது -
நிலாவியது. குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போடுயிரிடை
நட்பு (குறள். 338) நல்ல குணங்களுடையார்க்கே குற்றம் நீங்கும்
அல்லாதார்க்கு (தீய குணங்களுடையவர்க்கு)க் குற்றம் நீங்காது.
குலுங்கினாய்-நடுங்கினாய். சுராசுரர் எல்லாரும் நாடோறும் வணங்குவராய்
மணம் (தூபம் முதலியவற்றைக்) கொண்டு ஏத்தும் கடவுள். மனம் என்ற
பாடம் கழகப் பதிப்பில் உளது. மனம் கொடு-தியானித்து. அணங்கு-
தெய்வத்தன்மை. அணங்கன்-சிவபிரான். குணம் குற்றம் இரண்டும் உடைமை
குறிக்கச் சுராசுரரைக் குறித்தார்போலும்.
|