பக்கம் எண் :

847

2325.
தந்தையார் போயினார் தாயாரும் போயினார்
     தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார்
     கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா
     லேழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே.                          2


விளக்கியதுணர்க.

     2. பொ-ரை ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும்
ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக் கையில்
கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி
வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு
எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ
உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!

     கு-ரை: தந்தையர் தாயர் என்பன பலர்பால். தாமும் போவார்
என்னும் பன்மைநோக்கி நின்றன. கொந்த-குத்த. ‘கொந்தி அயில் அகல்
அம்பால் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து’ (பெரிய. கண்ணப்பர். 145). எரிய
என்றுமாம். ‘கொந்தழல்’ (சிந். 1499). கூற்றத்தார்-இயமதூதர் (உடம்பும்
உயிரும் கூறுபடுதலைச் செய்பவர்). கொண்டு போவாராய்ப் பார்க்கின்றார்.
வைத்தி- வைப்பாய்?. எந்த நாள் வாழ்வதற்கு மனம் வைத்தி’. என்று
வினாவியருளினார். மனம் ‘வாழாத நெஞ்சம்’ எனப்படும். ‘வாழ்கின்றாய்
வாழாத நெஞ்சமே வல்வினைப் பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை
ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்,
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே’ என்பது திருவாசகம்.
வாழக்கை, ‘உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உண்மை உரைத்தேன்
விரதம் எல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழாநெஞ்சே’ (தி.6 ப.42 பா.10).
என்றதிற் குறித்தது தம்முன்னோர் எல்லாரும் இறந்தவாறே தாமும் இறப்பது
திண்ணம். மாய்க்க மறலிதூதர் சித்தமாயுள்ளனர்.

     இறப்பு அண்மையில் இருக்கின்றதால், இறவாமல் என்றும்
வாழ்வதற்கு எந்தநாள் மனம் வைப்பாய்? வாழ்வது-திருவடி நிழலில்
அழியாத இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருப்பது. ஆரூர் தொழுது