பக்கம் எண் :

853

முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா
     யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே.
    
               6


இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து
அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம்.
மையல் கொண்டு அஞ்சாதே!

     கு-ரை: செடி-பாவம் துன்பம், தீ நாற்றமும் ஆம். (தி.2 ப.93 பா.2).
(தி.6 ப.82 பா.7). (திருவாலவாயுடையார் புராணம். 54:-19). நோயையுடைய
யாக்கை. (பா.3). ‘ஐம்பாம்பு’ என்ற பாடமே மதுரை-ஞானசம்பந்தப்பிள்ளை
அவர்கள் பதிப்பிலுளது. அம்பாம்பு என்ற பாடம் சிறவாது. ‘பாம்பின்வாய்த்
தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
ஒற்றியூருடைய கோவே’. (தி.4 ப.47 பா.1).

     பாம்பின் வாயில் தேரை. தேரையின் வாயில் சிறுபறவை (வண்டு).
அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக்
கொண்டிருக்கும் அச்சிறு பறவைக்கும், அதை உண்ணும்தேரைக்கும், அதை
விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால் எய்தும் இன்பத்தின் சிறுமையும்
தாம் உற்ற துன்பத்தின் பெருமையும உவமை உயிர்கள் விரு ம்பும்
உலகஇன்பத்தின சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும்
பொருட்டு உயர்ந்த பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற்
செலுத்தாமையால், அடையப்பெறாத உண்மை யின்பத்தின் பெருமையும்
உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு
பெருங்கேடு யாக்கையின் செடி கொள்நோய். நோய் பாம்பைக்கொல்லும்.
பாம்பு தேரையைககொல்லும், தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில்
பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு தேன்றுளியால் முறையாகச் சிறிது
இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன.
இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி, நிலைத்த பொருளை நாடுவித்தலே
இதன் உட்கோள்.

“அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகங் காண
 இடிகிணற் றறுகின் வேரைப் பற்றிநான் றிடஅவ் வேரைக்
 கடுகஓர் எலியும் வந்து கறித்திட அதில்நின் றோனுக்
 கிடைதுளி தேன்நக் கின்பம் போலும்இப் பிறவி யின்பம்.”