அகத்தியர்
பூசித்தது. சிவபெருமானின் திருமணக் கோலத்தை,
அண்மையிலுள்ள திருமறைக்காட்டில் காட்டக் கண்டு வணங்கியது.
படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழில்களையும் இயற்றும்
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் தமக்குப் புதல்வராகப்
பெறுதற்குத் தவம் இயற்றி அவ்வாறே பெற்றது. எமதருமராசன் சீவன்முத்தி
பெற்றது.
இத்தலத்தை
வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும்
பெருமைவாய்ந்தது. திருஞானசம்பந்தர் திருவாய்மலர்ந்தருளிய பதிகம் ஒன்று
பெற்ற பெருமைக்குரியது இத்தலம்.
கல்வெட்டு:
கோயிலில்,
சோழமன்னரில் திரிபுவனச் சக்கரவர்த்தி
இராஜராஜதேவரது இரண்டாம் ஆட்சியாண்டில் (29-1-1218) பொறிக்கப்பெற்ற
கல்வெட்டு ஒன்றும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவன
சக்கரவர்த்தி குலசேகர தேவரின் ஐந்து, முப்பத்தொன்று
இவ்வாட்சியாண்டுகளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும்,
மாறவர்மன், திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினைந்தாம்
ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு
கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நந்தா விளக்குகளுக்கும் நித்திய
வழிபாட்டிற்கும் நிலங்கள் அளிக்கப்பெற்ற செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
இராஜராஜன் ஒரு விளக்கிற்காக 1500 காசுகளும், மாறவர்மன் குலசேகரன்
ஐந்தாமாண்டில் பொன்தானமும், முப்பத்தொன்றாமாண்டில் விழா நடத்த
நிலதானமும் அளித்தனன்.1
2. திரு
அம்பர்மாகாளம்
அம்பன், அம்பாசுரன்
என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற
பாவம் நீங்கக் காளி பூசித்த பதியாதலின் இப்பெயர் பெற்றது. இது கோயில்
மாகாளம் எனவும் வழங்கப்பெறும். பேரளம்-திருவாரூர் தொடர்வண்டித்
தொடரில் பூந்தோட்டம் நிலயத்திலிருந்து கிழக்கே 4. கி.மீ தூரத்தில்
உள்ளது. இது காவிரியின் தென்கரைத் தலங்களுள்
1See
the Annual Reports on South Inidian Epigraphy for the
year 1904, Numbers 504-507. (Tanjore District, Tiruthuraipoondi Taluk)
|