|
கொழுங்கனிசுமந்
துந்திக்
குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
8 |
2450.
|
நுணங்கு
நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே.
9 |
சூழ்ந்த நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் திருவருளை, செழுமையான
குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன்
அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற
வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார்.
கு-ரை:
விரலான்:- அண்மை விளி. அருளான்-அருள் செய்யான்.
அருள் அருளான் என்று இயைக்க. அடிகள் தம் அருளை, போற்றி
என்பார்க்கு அல்லது அருளான்.
9.
பொ-ரை: மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய
நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில்
அரத்துறை அடிகள் தம் திருவருள், நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்த
பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய்
இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமேயன்றி
ஏனையோர்க்குக் கைகூடாதது.
கு-ரை:
நுணங்கும் நூல்:- நூற்பொருளின் நுண்மை நூலின்
மேல் ஏற்றிக்கூறப்பட்டது. நுணங்கிய கேள்வியர் (குறள் 419.) என்பதற்கு,
கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்வி மேலேற்றப்பட்டது என்ற
பரிமேலழகர் உரையை நோக்குக. அவன் வேதம் நுணங்கிய நூல், நோக்க
அரியான் - நோக்கரியான். நான்கன்
|