பக்கம் எண் :

942

2448.







நீல மாமணி மிடற்று
     நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற்
     சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக்
     குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
     அரத்துறை அடிகள்தம் அருளே.     7
2449.



செழுந்தண் மால்வரை யெடுத்த
     செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான்
     போற்றியென் பார்க்கல்ல தருளான்


வருள், வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை
ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏந்தி வணங்கி மனம்
உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவதில்லை
ஆதலின் கை கூடாதது.

     கு-ரை: உரவுநீர்-பரந்தகங்கை. ‘ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்’ (நாலடி. 175) என்பதில் பரந்த கடல்நீரைக்
குறித்தல் அறிக. பரவி-வணங்கி வாழ்த்தி. ‘பரவுவார் பிணிகளைவாய்’
என்பதில் வணக்கமும், ‘வாழ்த்துவதும். . . . . யானும் உன்னைப்
பரவுவனே’ (திருவாசகம் 20). என்பதில் வாழ்த்தும் உணர்த்துவது உணர்க.

     7. பொ-ரை: அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும்
குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலைகள்
சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள், நீலமணி
போன்ற கண்டத்தினன், நீறணிந்த சிவன், என விரும்பி வழிபடும்
சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது.

     கு-ரை: சீலமாந்தர்-ஞானியர். அவரே சிவனெனப்பேணும்
உண்மைநிலை உணர்ந்தவர். ‘திருநீலகண்டா! நீறணிமுதல்வா!
சிவபெருமானே! எனப் போற்றும் மனிதரும் ஆம்.

     8. பொ-ரை: கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும்
குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள்