பக்கம் எண் :

941

2446.







வெருகு ரிஞ்சுவெங் காட்டில்
     ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால்
     ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
     மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில்
     அரத்துறை அடிகள்தம் அருளே.     5
2447.







உரவு நீர்சடைக் கரந்த
     வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற்
     பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக்
     குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
     அரத்துறை அடிகள்தம் அருளே.     6


     கு-ரை: துன்ன ஆடை-தைத்தலையுடைய ஆடை, அன்னம்-பறவை.
திருஞானசம்பந்தர் காலத்தில் அன்னப்புள் இருந்த உண்மை இதனாலும்
புலனாயிற்று.

     5. பொ-ரை: மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம்
மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து
பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின்
திருவருள், காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும்
விமலனே! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம்
உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது.

     கு-ரை: வெருகு-காட்டுப்பூனை. உரிஞ்சு-தேய்க்கின்ற. உருகி
நைபவர்-உள்ளம் உருகி இதுகாறும் இறைவனை வழிபட மறந்தமைக்கு
வருந்துவோர். இழி-இறங்குகின்ற.

     6. பொ-ரை: குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும்
குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள்
இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திரு