2444.
|
பிணி
கலந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி
வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே. 3 |
2445.
|
துன்னவாடை
யொன் றுடுத்துத்
தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப்
பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே. 4 |
3.
பொ-ரை: மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு
வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல்வாயில்
அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான
சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன்
திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு
இயலாதது.
கு-ரை:
பிணி-பிணிப்பு. சடையாதற்குப் பிணிப்பு இன்றியமையாதது.
கலந்து-திரிகரணங்களும் ஒற்றுமையுற்று. பணி செய்யாத பாவிகள்.
மணிகளையும் பொன்னையும் உந்தி (த் தள்ளி)க் கொண்டு வரும் நீர்.
4.
பொ-ரை: பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு
வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும்
நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள், தைத்த கோவண ஆடை
ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன்
பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக்
கைகூடுவதன்று.
|